விபத்துக்களில் பலர் பலி
கலேவலை – தம்பகஹமுல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார். அத்துடன், சிறு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர். முச்சக்கர வண்டியொன்று கெப் ரக வாகனத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் இன்று நேர்ந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள்;;;;; தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் கெப் ரக வாகன சாரதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை, காலியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார். பலப்பிட்டிய பிரதேசத்தில் தொடருந்து வீதிக்கு

