விபத்துக்களில் பலர் பலி

234 0

கலேவலை – தம்பகஹமுல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.

அத்துடன், சிறு குழந்தை உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.

முச்சக்கர வண்டியொன்று கெப் ரக வாகனத்தில் மோதியதில் இந்த அனர்த்தம் இன்று நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள்;;;;; தம்புள்ளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கெப் ரக வாகன சாரதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, காலியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்தில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

பலப்பிட்டிய பிரதேசத்தில் தொடருந்து வீதிக்கு குறுக்காக செல்லும் வீதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பலபிட்டிய ஹனட்டிய பிரதேசத்தை சேர்ந்த எண்பது வயது முதுபெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதேவேளை அனுராதபுரத்தில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் துவிச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற 61 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.