சசிகலா பேச்சு கண்டிக்கத்தக்கது – மைத்ரேயன் எம்.பி. கண்டனம்

Posted by - February 11, 2017

தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து ஏழு நாட்கள் ஆகி விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசகிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை இன்று சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் சசிகலா. இதன்பின் போயஸ் கார்டனில் திரண்டிருந்த தொண்டர்களிடையே சசிகலா பேசியதாவது அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தமிழகத்தின் நலனை ஆளுநர் காப்பாற்ற

தலித்பெண் படுகொலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2017

அரியலூரை சேர்ந்த தலித் இளம்பெண் நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம். எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்க பாஷியம், எஸ்.வி. ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் புத்த நேசன், சாரதிதாஸ் பாண்டியன், தமிழ்செல்வன், பூவை ஜேம்ஸ், பாரதி,

அனைத்து எம்.எல்.ஏ.க்களுடன் சந்திக்க அனுமதி தர வேண்டும் – கவர்னருக்கு சசிகலா கடிதம்

Posted by - February 11, 2017

கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா இன்று (சனிக் கிழமை) ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கடந்த 5.2.2017 அன்று நடந்தபோது, என்னை சட்டசபை அ.தி.மு.க. தலைவராக தேர்ந்து எடுத்தனர். இதையடுத்து இது தொடர்பான கடிதத்தை தங்களிடம் ஒப்படைப்பதற்காக நான் உங்களை சந்திக்க அனுமதி கோரி கடந்த 5.2.2017 மற்றும் 7.2.2017 ஆகிய நாட்களில் கடிதங்கள் அனுப்பினேன். அதை ஏற்று தாங்கள் கடந்த 9.2.2017

ஓ.பன்னீர்செல்வத்தால் உயிருக்கு ஆபத்து – சொகுசு விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் பேட்டி

Posted by - February 11, 2017

கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதி சாலையில் வைத்து கலசப்பாக்கம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மோகன் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது இருவரும் யாருடைய கட்டாயத்தின் பேரிலும் நாங்கள் இங்கு தங்கவில்லை என்றும், முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆட்கள் மிரட்டியதாலேயே இங்கு தங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்களை கூறினார்கள். இது தொடர்பாக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கூறியதாவது:- யாருடைய விருப்பத்தின் பேரிலும் நாங்கள் இங்கு தங்கவில்லை. எங்களுக்கு எந்தவித பயமும் இல்லை.

பிலிமதலாவையில் புகையிரத விதியின் அருகாமையில் நடந்துள்ள கோர சம்பவம் – மகள் மற்றும் தாயாருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை

Posted by - February 11, 2017

பிலிமதலாவ புகையிரத குறுக்கு விதியில் பெண் ஒருவரும் அவரத மகளும் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளனர். இன்று மதியம் குறித்த இரண்டு பேரும் புகையிரத வீதியின் குறுக்காக செல்ல முற்பட்டுள்ள போது மோதுண்டுள்ளதாக கடுகன்னாவ காவற்துறை தெரிவித்துள்ளது. இதன்போது காயமடைந்த தாயார் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மகள் பேராதெனிய மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தயார் உயிரிழந்துள்ளார். மகள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணொளி தொடர்பாடல் மூலம் அறியவந்த விடயம் – மனைவி வாக்குமூலம்

Posted by - February 11, 2017

இலங்கையை சேர்ந்த ஒருவருடைய மரணம் தொடர்பில், இலங்கையர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை காணொளி தொடர்பாடல் மூலம் தனது கணவருடன், தான் உரையாடியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்போது, இரண்டு பேர் தனது கணவர் அருகில் வந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது

தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றதாம் – துரோகி கருணா!

Posted by - February 11, 2017

நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பதற்கான முக்கிய நோக்கம் ஒரு தீ பொறியை ஆரம்பிப்பதற்காக என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும்த துரோகி  கருணா கூறியுள்ளார்.

பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted by - February 11, 2017

பொரலஸ்கமுவ – நிவ்டன் செனவிரத்ன மாவத்தையில் உள்ள பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டமானது குறித்த மஹாரகம – பொரலஸ்கமுவ வீதியிலுள்ள குறித்த விடுக்கு முன்னால் இடம்பெற்றது. 18 வருடமாக நடத்திச்செல்லப்படும் குறித்த பாலியல் தொழில் விடுதியினால், பல்வேறு அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பில் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டம்

Posted by - February 11, 2017

புதுக்குடியிருப்பு பிரதேச செயலாகத்திற்கு முன்னால் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தியும் கோப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள், காணிகளை விடுவிப்பதற்கான போராட்டம் தொடருமென தெரிவிக்கின்றனர் காணி விடுவிக்கும் போதே எமது போராட்டமும் நிறுத்தப்படுமென தெரிவிக்கும் மக்கள் இன்று ஒன்பதாவது நாளாக போராடிவருகின்றனர். போராட்டம் தொடரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.