தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றதாம் – துரோகி கருணா!

372 0

நாங்கள் இன்று ஒன்று கூடியிருப்பதற்கான முக்கிய நோக்கம் ஒரு தீ பொறியை ஆரம்பிப்பதற்காக என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும்த துரோகி  கருணா கூறியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே கருணா இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், இன்றைய அரசியல் சூழல் தமிழ் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றது.

தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல குழப்பம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நான் வெளியே வருவதற்கான நேரம் தற்போது நெருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயுதபோராட்டம் என்பது நாங்கள் தொடங்கியது இல்லை. முதன் முதலாக ஜே.வி.பியினர்தான் ஆரம்பித்தனர்.

இயக்கம் பிரிந்து செல்லும் முன்னர் மகிந்த ராஜபக்ஸவிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அது என்னவென்றால் கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழன் முதலமைச்சராக வர வேண்டும்.

இதன் பின்னரே கிழக்கு மாகாண முதலமைச்சராக பிள்ளையான் தெரிவு செய்யப்பட்டதாகவும் கருணா குறிப்பிட்டுள்ளார்.

நான் அமைச்சராக இருந்த போது ஒரு நிலம் பறிபோக வில்லை. ஆனால் நல்லாட்சி வந்த பின்னர் நிலம் பறிபோகிறது. நிலத்தை காப்பாற்றக்கூடிய உரிமை இங்கு யாரிடமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.