காணொளி தொடர்பாடல் மூலம் அறியவந்த விடயம் – மனைவி வாக்குமூலம்

413 0

இலங்கையை சேர்ந்த ஒருவருடைய மரணம் தொடர்பில், இலங்கையர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 27 மற்றும் 30 வயதுடையவர்கள் என மலேசிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை காணொளி தொடர்பாடல் மூலம் தனது கணவருடன், தான் உரையாடியதாக உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளதாக மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்போது, இரண்டு பேர் தனது கணவர் அருகில் வந்ததாகவும் அவரது மனைவி தெரிவித்துள்ளார் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் 49 வயதுடையவர் எனவும், அவரது உடலம் மலேசிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.