தலித்பெண் படுகொலையை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

372 0

அரியலூரை சேர்ந்த தலித் இளம்பெண் நந்தினி கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். வசந்தகுமார் எம். எல்.ஏ., மாவட்ட தலைவர்கள் ராயபுரம் மனோ, ரங்க பாஷியம், எஸ்.வி. ரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் புத்த நேசன், சாரதிதாஸ் பாண்டியன், தமிழ்செல்வன், பூவை ஜேம்ஸ், பாரதி, அகரம் கோபி, கிஷோர் குமார், சவுந்தர், அய்யப்பன், உமா பாசவி, இமயா கக்கன், ரஷீதா பேகம், எம்.எஸ். திரவியம், துளசிங்கம், வளசை ஜெனீப், ரஞ்சன்குமார், வீரபாண்டியன், விஜயன், கொளத்தூர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் செல்வப்பெருந்தகை ஆர்ப்பாட்டத்தில் பேசியதாவது:-

“அரியலூர் தலித் இளம்பெண் நந்தினி கற்பழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கை சி.பி.ஐ -க்கு மாற்ற வேண்டும். இந்து முன்னணியினர் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலித்துகள்தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். அதை போலீசார் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கின்றனர். தலித் மக்களுக்கு மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை”
இவ்வாறு அவர் பேசினார்.