தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்து ஏழு நாட்கள் ஆகி விட்ட நிலையில் தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தின் பொறுப்பு ஆளுநருக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசகிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளுநரை இன்று சந்திக்க அனுமதி கேட்டுள்ளார் சசிகலா.இதன்பின் போயஸ் கார்டனில் திரண்டிருந்த தொண்டர்களிடையே சசிகலா பேசியதாவது
அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தமிழகத்தின் நலனை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். கடந்த 5-ம் தேதி ஆளுநரை சந்தித்தபோது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து அரசு அமைக்க என்னை அழைக்க வேண்டும் என விரிவாக விளக்கம் அளித்தேன்.
நம்மை பிரித்தாள நினைப்பவர்கள் தோற்றுப்போவார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை எதற்கும் அஞ்சப்போவதில்லை. எஃகு கோட்டையான அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தோடும் நம்பிக்கையில் இருப்பதால் பொறுமையாக இருக்கிறோம். ஓரளவுக்குத் தான் பொறுமையைக் கையாள முடியும். அதற்குமேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதைச் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
சசிகலா பேசியதை தொடர்ந்து சென்னையி்ல் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் வீட்டில் எம்பி மைத்ரேயன் பேட்டியளித்தார், அப்போது சசிகலா மிரட்டும் தொனியில் பேசியது பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். சசிகலா பேசியது தொடர்பாக குடியரசு தலைவர், பிரதமர் தலையிட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

