பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

332 0

பொரலஸ்கமுவ – நிவ்டன் செனவிரத்ன மாவத்தையில் உள்ள பாலியல் தொழில் விடுதியை அகற்றுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

பௌத்த பிக்குகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது குறித்த மஹாரகம – பொரலஸ்கமுவ வீதியிலுள்ள குறித்த விடுக்கு முன்னால் இடம்பெற்றது.

18 வருடமாக நடத்திச்செல்லப்படும் குறித்த பாலியல் தொழில் விடுதியினால், பல்வேறு அசம்பாவிதங்களை சந்திக்க நேரிடுவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்தனர்.