பிலிமதலாவையில் புகையிரத விதியின் அருகாமையில் நடந்துள்ள கோர சம்பவம் – மகள் மற்றும் தாயாருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை

386 0

பிலிமதலாவ புகையிரத குறுக்கு விதியில் பெண் ஒருவரும் அவரத மகளும் புகையிரதத்துடன் மோதுண்டுள்ளனர்.

இன்று மதியம் குறித்த இரண்டு பேரும் புகையிரத வீதியின் குறுக்காக செல்ல முற்பட்டுள்ள போது மோதுண்டுள்ளதாக கடுகன்னாவ காவற்துறை தெரிவித்துள்ளது.

இதன்போது காயமடைந்த தாயார் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மகள் பேராதெனிய மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தயார் உயிரிழந்துள்ளார்.

மகள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.