12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில்…………..(காணொளி)

Posted by - February 11, 2017

முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது. முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் சூரிபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் புலக்;குடியிருப்புப்பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளும் கேப்பாப்புலவு பகுதியில் 155 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் என சுமார் 524 ஏக்கர் காணி கடந்த எட்டு வருடங்களாக விமானப்படையினரால்; முகாம் அமைக்கப்பட்டுள்ளது இதனால் அப்பகுதி மக்கள் கேப்பாப்புலவு சீனியாமோட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற கேப்பாப்புலவு மாதிரிக்கிராகமத்தில்

கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 11, 2017

முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக ஆர்வலர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்னால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.கவனயீர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பில் கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி(காணொளி)

Posted by - February 11, 2017

மட்டக்களப்பில், கருணா தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வடக்கு கிழக்கை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று இன்றைய தினம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்த புதிய அரசியல் கட்சி, இன்று காலை மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் ஆரம்பித்துவைக்கப்பட்டது. மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும் இதன்போது தமது

சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும்- க.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - February 11, 2017

  சமஸ்டி அரசின் கீழ் தமிழ் மக்களுக்கு கிடைக்கின்ற தீர்வு பொறிமுறை முஸ்லிம் மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதில் தமக்கு வேறுபட்ட கருத்து இல்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேங்காய் விலை குறைய இன்னும் மூன்று மாதமாகும்!

Posted by - February 11, 2017

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை!

Posted by - February 11, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண நிபுணர் குழுவை தற்போது நியமிப்பதில் பயனில்லை என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பில் CIA இரகசிய அறிக்கை வெளியீடு!

Posted by - February 11, 2017

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்பினால் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான இரகசிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கு விளக்கமளிக்கும் பொறுப்பு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு

Posted by - February 11, 2017

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி பெறாத பட்சத்தில் விசா வழங்கப்படாது : சுகாதார அமைச்சு

Posted by - February 11, 2017

மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மக்கள் புரட்சி வெற்றி பெறவே பாண்டியராஜன் வந்துள்ளார் – பன்னீர்செல்வம் புகழாரம்

Posted by - February 11, 2017

தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நேற்று வரை விகே சசிகலாவிற்கு ஆதரவு அளித்து வந்த மாஃபா பாண்டியராஜன் ‘வாக்காளர்களின் குரலுக்கு செவி சாய்ப்பேன்’ என இன்று தனது ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து தற்சமயம் அவர் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்திற்கு சென்று நேரில் தனது ஆதரவை தெரிவித்தார். கட்சியின் ஒற்றுமைக்காகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் புகழையும் கருத்தில் கொண்டு முடிவெடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவளித்த பின்