முல்லைத்தீவு கேப்பாப்புலவு புலக்குடியிருப்புப்பகுதி மக்களது கவனயீர்ப்புப் போராட்டம் 12ஆவது நாளாக, எந்தத்தீர்வுகளும் கிடைக்காத நிலையில் இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
முல்லைத்தீவு கரைதுரைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கீழ் சூரிபுரம் பகுதியில் 59 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் புலக்;குடியிருப்புப்பகுதியில் 84 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகளும் கேப்பாப்புலவு பகுதியில் 155 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் என சுமார் 524 ஏக்கர் காணி கடந்த எட்டு வருடங்களாக விமானப்படையினரால்; முகாம் அமைக்கப்பட்டுள்ளது
இதனால் அப்பகுதி மக்கள் கேப்பாப்புலவு சீனியாமோட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கின்ற கேப்பாப்புலவு மாதிரிக்கிராகமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்களது காணிகளை விடுவிக்கக் கோரி கடந்த 31ம் திகதி முதல் கேப்பாப்புலவு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
ஒரு வார காலத்திற்கு மேலாக முன்னெடுக்கப்பட்டு வந்த இந்தப்போராட்டம்; 12ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்;பட்டு வருகிறது.
கொட்டும் பனியிலும் வெயிலிலும் பச்;சிளம் குழந்தைகள் வயோதிபர்;கள் கர்ப்பிணிப் பெண்கள் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேவளை முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் முன்பு பொன்னம்பலம் ஞாபகார்த்த மருத்துவமனை இயங்கிய தனியார் காணி மற்றும் அதனைச்சூழவுள்ள 19 ஏக்கர் காணிகளை விடுவிக்கக்கோரியும், கேப்பாப்புலவு மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் முன்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்புப்போராட்டம் ஒன்பதாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகிறது.
பிரதமர் ரணல் விக்கிரமசிங்க மற்றும் அரச தரப்புக்களுடன் பேச்சுக்கள் இடம் பெற்ற போதும் எந்த வித இணக்கப்பாடுகளுமின்றி போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

