இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக வெளிநாட்டு தூதுவர்களுக்கு விளக்கும் பொறுப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான தேசிய நல்லிணக்க பணியகம் ஊடக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளது.
இதன் முதற்கட்டமாக சுவிஸர்லாந்து உள்ளிட்ட சில நாடுகளின் தூதுவர்களை முன்னாள் ஜனாதிபதி சந்தித்து நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு சர்வதேசத்தின் உதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

