இலங்கை தொடர்பில் CIA இரகசிய அறிக்கை வெளியீடு!

328 0

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் சீ.ஐ.ஏ அமைப்பினால் மேற்கொண்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்விற்கான இரகசிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீ.ஐ.ஏ அமைப்பின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக குறித்த அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளின்டனின் நிறைவேற்று கட்டளையை 20 வருடங்களுக்குப் பின்னர் செயற்படுத்துவதற்கு சீ.ஐ.ஏ அமைப்பினால் தீர்மானிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இந்த அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.

சீ.ஐ.ஏ அமைப்பினால் தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட மில்லியன் கணக்கிலான இரகசிய அறிக்கையில், இலங்கையின் அரசியல் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

விசேடமாக 1950 ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து 1980 ஆண்டின் இறுதி பகுதி வரையான அரசியல், பொருளாதாரம் தொடர்பாக சீ.ஐ.ஏ பெற்றுக்கொண்ட தகவல்கள் இதில் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.