யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும்- சி.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 13, 2017

  யாழ்ப்பாண குடாநாட்டில் அதிகரித்துவரும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிசார் அக்கறை கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கஞ்சாப்பாவனை, வாள்வெட்டுச் சம்பவங்கள் இளைஞர் மத்தியில் அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட, வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் பொலிஸார் இதனைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.  

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள்(காணொளி)

Posted by - February 13, 2017

  இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. 4 ஆயிரம் தனி வீடுகள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கமைவாக, நுவரெலியா பொகவந்தலாவ பொகவனா தோட்டத்தில் அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று நடைபெற்றது. மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில், 355 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் அரிந்தம்

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்களால் கவனயீர்ப்பு போராட்டம்(காணொளி)

Posted by - February 13, 2017

மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லைத்தீவு கேப்பாபுலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில், மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவக மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டமானது மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த இசை நடன கற்கை நிறுவகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் – டெனிஸ்வரன்

Posted by - February 13, 2017

கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுக்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அதன்போது அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ரி.ரவிகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவகரன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட நண்பர்கள் மற்றும் ஐக்கிய இராட்சியத்தில் இருந்து வருகைதந்திருந்த மக்கள் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இச்சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை 12.02.2017 மாலை 3 மணியளவில்

மன்னாரில் விபத்து மூவர் மருத்துவமனையில்…

Posted by - February 13, 2017

மன்னார்  நானாட்டான் பிரதான வீதியில்  நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மன்னார்  பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், பின்னால் வந்த உந்துருளி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். சம்பவத்தில் உந்துருளியில் பயணித்த இரண்டு இளைஞர்களும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்தனர்.  சம்பவம் தொடர்பில் மன்னார் காவல்துறையினர் விசாரனைகனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும்

Posted by - February 13, 2017

செட்டிக்குளத்தில் இராணுவம் ஆக்கிரமித்திருக்கும் காணிகள் உடன் விடுவிக்கப்பட வேண்டும். பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் காட்டமான தீர்மானம். இராணுவத்தினரால் யுத்த காலத்தில் ஆக்கிரமிக்கபட்டு இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் செட்டிகுளப் பிரதேச எல்லைக்குட்பட்ட மக்களின் குடியிருப்பு காணிகளையும், வயற் காணிகளையும் இராணுவம் அவசரமாக விடுவிக்க வேண்டுமெனவும் அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் பேச்சுநடத்தி ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுப்பதெனவும் பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இன்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. இணைத் தலைவர்களான அமைச்சர் றிஷாட் பதியுதீன், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்,

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவு

Posted by - February 13, 2017

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சிலரால் இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அது , தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து தம்மை விடுதலை செய்யுமாறு கோரியாகும். இந்நிலையில் , இன்று மதியம் அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டதாக யாழ்ப்பாண சிறைச்சாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

யாழ் கச்சேரி நல்லூரி வீதியில் விபத்து மூவர் படுகாயம்

Posted by - February 13, 2017

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி 4 ம் சந்தி பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தும் கயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. இவ்விபத்தில் கயஸ் வாகனத்தில் பயணம் செய்த மூவர் பலத்த காயமடைந்நதோடு கயஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது யாழ்ப்பாண பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1

அரிசி மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிடும் நிலை

Posted by - February 13, 2017

அரிசியை மறைத்து வைக்கும் மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

வில்பத்து பிரச்சினையை ஆராய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும்

Posted by - February 13, 2017

வில்பத்து பிரச்சினை தொடர்பாக துரித விசாரணையை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்க வேண்டும் என தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார ராஜாங்க அமைச்சர் நிரோஸன் பெரேரா ஜனாதிபதியிடம் கோரி்க்கை விடுத்துள்ளார்.