மண்மீட்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் – டெனிஸ்வரன்

277 0

கடந்த 14 நாட்களாக தமது சொந்த மண்ணை மீட்டெடுக்க தொடர்போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களை சந்தித்தார் அமைச்சர் பா.டெனிஸ்வரன் அதன்போது அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஜி.ரி.லிங்கநாதன், ரி.ரவிகரன், மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவகரன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், அமைச்சரின் முல்லைத்தீவு மாவட்ட நண்பர்கள் மற்றும் ஐக்கிய இராட்சியத்தில் இருந்து வருகைதந்திருந்த மக்கள் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். இச்சந்திப்பானது ஞாயிற்றுக்கிழமை 12.02.2017 மாலை 3 மணியளவில் நடைபெற்றது.

குறிப்பாக கடந்த 7ம் திகதி அமைச்சர் அவர்கள் அவ்மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்ததோடு அவர்களின் போராட்டம் பற்றியும் கலந்துரையாடியிருந்தார். அந்தவகையில் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபடும் பெற்றோருடன் பாடசாலை செல்லும் மாணவர்களின் நிலைப்பாடு குறித்தும், அவர்களுக்கான போக்குவரத்து தொடர்பிலும் கலந்துரையாடினார். மாணவர்கள் தமக்கு ஒரு நிலையான தீர்வு கிடைக்கும்வரை தாம் பாடசாலைக்கு செல்லப்போவதில்லை என்று கூறியிருந்த நிலையில் பெற்றோரின் முடிவின் அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வார்கள் எனில் அதற்க்கான போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அதற்க்கான உதவிகளை செய்வதற்கு முன்வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.