யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி 4 ம் சந்தி பகுதியில் பாடசாலை சேவையில் ஈடுபடும் பேருந்தும் கயஸ் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியது. இவ் விபத்து சம்பவம் மாலை 3 மணியளவில் இடம்பெற்றது.இவ்விபத்தில் கயஸ் வாகனத்தில் பயணம் செய்த மூவர் பலத்த காயமடைந்நதோடு கயஸ் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது யாழ்ப்பாண பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


