யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட உணவு தவிர்ப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இந்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சிலரால் இந்த உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
அது , தமக்கு எதிரான வழக்கு விசாரணைகளை விரைவாக நிறைவு செய்து தம்மை விடுதலை செய்யுமாறு கோரியாகும்.
இந்நிலையில் , இன்று மதியம் அவர்கள் தமது போராட்டத்தை கைவிட்டதாக யாழ்ப்பாண சிறைச்சாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

