அரிசியை மறைத்து வைக்கும் மாபியாக்களுடன் அரசாங்கம் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கனியவளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தனிப்பட்ட சிலரின் தேவைகள் கருதி அரிசியின் விலையை உயர்த்துவதற்கு இடமளிக்கப் போவதில்லை என அமைச்சர் குறிப்பிட்டார்.
காலி, கரன்தெணிய பிரதேத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் சந்திம வீரக்கொடி இந்த கருத்தை வெளியிட்டார்.
அதேபோன்று இன்றைய காலகட்டத்தில் ஊடக சுதந்திரம் அதிகளவிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

