மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்கக்கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மீனவர்களின் உரிமைகளை பாதுகாக்ககோரியும் மீனவர்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு கோரியும் மட்டக்களப்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட கடற்தொழிலாளர்கள் அமைப்புகள் மற்றும் மீனவர் அமைப்புகள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தன. இன்று சர்வதேச மீனவர் தினத்தினை முன்னிட்டு இந்த கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடலில் தொழில் செய்யும் மீனவர்கள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுவருவதாகவும் அவர்களுக்கான உதவித் திட்டங்கள் மிகவும் குறைவான நிலையிலேயே கிடைப்பதாகவும் இந்த

