கேப்­பாப்­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளில் 41 குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன!

Posted by - November 22, 2017

பெரும் போராட்­டங்­க­ளின் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்ட கேப்­பாப்­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளில் 41 குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

முன் பள்ளிகளின் தரத்தை அதிகரிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை!

Posted by - November 21, 2017

முன் பள்ளிகளின் தரத்தை அதிகரிக்க வருங்காலத்தில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சுடன் இணைந்து செயற்பட கல்வி அமைச்சு எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

ரஞ்சனின் குரல் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு!

Posted by - November 21, 2017

நீதிமன்றத்தை அவமதித்ததாக தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக இன்று காலை  உயர் நீதிமன்றில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க முன்னிலையாகியிருந்தார்.

முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தலைவிரித்தாடுகின்றது!

Posted by - November 21, 2017

பயங்கரவாதத்திற்கு சாயலான முஸ்லிம் அடிப்படைவாதம் நாட்டில் தற்போது தலைவிரித்தாடுவதாக பொதுபலசேனா எச்சரித்துள்ளது.

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா?

Posted by - November 21, 2017

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்‌ஷ வெகு விரைவில் கைது!

Posted by - November 21, 2017

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ வெகு விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜனாதிபதிக்கு எதிராக சதி- சரத் வீரசேகர!

Posted by - November 21, 2017

இலங்கை இராணுவ வீரர்கள் விவகாரத்தில் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சும் மௌனம் சாதிப்பது ஜனாதிபதியை சிக்க வைப்பதற்கான சதிவேலையின் ஒரு அங்கமே என, கடற்படையின் முன்னாள் தளபதியும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சரத் வீரசேகர சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

எமக்கு அபிவிருத்தியும் இல்லை உரிமையுமில்லை-வியாழேந்திரன்

Posted by - November 21, 2017

முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தவரையில் அபிவிருத்திக்காக போராடிப் போராடி எந்த உரிமையினையும் இழக்கவில்லை. ஆனால் நாங்கள் உரிமைக்காக போராடி அபிவிருத்தியும் இல்லாமல் உரிமையும் இல்லாமல் இருப்பதை யதார்த்தமாக நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட  தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். இந்த நல்லாட்சியில் இந்த நாட்டில் யார் பிழை செய்தாலும் விசாரணை நடாத்தப்படும்  நிலைமை அதிகரித்துள்ளதையே ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக பிரதமர் ஆஜராகியுள்ளது வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட

தொடரும் சிறி லங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களும் இரண்டு முகச்செயற்பாடுகளும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

Posted by - November 21, 2017

  November 21. 2017 Norway ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு நவம்பர் 06ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை நடைபெற்றது. இந்த அமர்வில் இலங்கையின் மனித உரிமைச் செயற்பாடுகள் பற்றியும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவைபால் ஒரு பக்க அறை நிகழ்வும் நடாத்தப்பட்டது. இனவழிப்பு சிறி லங்கா அரசாலும் இவ்வமர்வில் கலந்துகொள்ள ஒரு அரசமட்டக் குழு அனுப்பிவைக்கப்பட்டிருந்நது இங்கே குறிப்பிடத்தக்கது. அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால்

இந்திய மீனவர்கள் 37 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

Posted by - November 21, 2017

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 37 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம்  திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதங்களில் இலங்கை கடற்படையால்  இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கைதுசெய்யப்பட்ட இராமநாதபுரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 37 இந்திய மீனவர்கள் யாழ்பாணம் சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிவான் இந்திய மீனவர்கள்