கேப்­பாப்­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளில் 41 குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன!

303 0

பெரும் போராட்­டங்­க­ளின் பின்­னர் மீள்­கு­டி­ய­மர்த்­தப்­பட்ட கேப்­பாப்­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­க­ளில் 41 குடும்­பங்­க­ளுக்கு வீடு­கள் வழங்­கப்­ப­ட­வுள்­ளன.

இந்த வீடு­க­ ளுக்­கான அடிக்­கல் நடும் நிகழ்வு நாளை காலை இடம்­பெ­ற­வுள்­ளது. பிலக்­கு­டி­யி­ருப்பு மக்­கள் தமது காணி­களை இரா­ணு­வத்­தி­டம் இருந்து போரா­டிப் பெற்­றி­ருந்­த­னர்.

ஆனால் அவர்­க­ளது காணி­க­ளில் அவர்­க­ளுக்­கென்று வீடு­கள் உடனே வழங்­கப்­ப­ட­வில்லை.

தறப்­பாள் கொட்­ட­கை­ க­ளில் வாழ்­வ­தா­கத் தெரி­வித்­துத் தமக்கு வீடு­கள் அமைத்­துத் தரு­மா­றும் கோரி­யி­ருந்­த­னர்.

இந்த விட­யம் அண்­மை­யில் இடம்­பெற்ற முல்­லைத் தீவு மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழு­க்கூட்டத்தின் கவ­னத்­துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

உரிய அதி­கா­ரி­கள் இது தொடர்­பில் நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று பிலக்­கு­டி­யி­ருப்பு சார்­பா­கக் கலந்­து­கொண்ட மக்­கள் பிர­தி நி­தி­கள் கருத்­துக்­க­ளைப் பகிர்ந்­த­னர். விட­யம் பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­பட்­டது.

‘‘மீள்­கு­டி­ய­மர்­வின் பின்­னர் குறித்த பிர­தேச மக்­க­ளுக்­கென இரா­ணு­வத்­தி­ன­ரால் வீடு­கள் அமைத்­துக்­கொ­டுக்­கப்­பட்­டன. வீடு­கள் அரச செல­வில் அமைக்­கப்­பட்­டன.
அத­னால் குறித்த பிர­தேச மக்­க­ளுக்கு மீண்­டும் புதி­தாக வீடு­களை வழங்க முடி­யாத நிலை உள்­ளது’’ என்று மாவட்­டச் செய­லர் தெரி­வித்தார்.

Leave a comment