ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் யாழ் மாநகரசபைக்குப் புதிய கட்டடம்

Posted by - November 22, 2017

நகர அபிவிருத்தி அதிகார சபையின் 1000 மில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாணம் மாநகரசபைக்கான தலைமைச் செயலகக் கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகவும் இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்றும் நகர அபிவிருத்திச் சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் வை.ஏ.ஜீ.கே.குணதிலக தெரிவித்துள்ளார்.

கிழக்கு உள்ளூராட்சிச் சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் முன்னாள் முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - November 22, 2017

புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சிச் சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பத்து ஆயிரம் ரூபா மேலதிகக் கொடுப்பனவுகள்!

Posted by - November 22, 2017

இலங்கையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்துக்கு மேலதிகமாக 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு கடந்த ஒக்ரோபர் மாதத்திலிருந்து வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் மரநடுகை மாத மலர்க்கண்காட்சி

Posted by - November 22, 2017

வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க் கண்காட்சி இடம்பெற்று வருகிறது.

இம்மானுவேல் பெர்னாண்டோ புதிய ஆயராக நியமனம்!

Posted by - November 22, 2017

மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக கொழும்பு மறைமாவட்டத்தின் துணை ஆயராக கடமையாற்றிய கலாநிதி பீடலிஸ் லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளதாக திருத்தந்தை அறிவித்துள்ளதாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை தெரிவித்தார்.

மக்களின் பணத்தை களவாட விடமாட்டேன்!-அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

Posted by - November 22, 2017

“இன்று பெற்றோல் மாபியா உள்ளது. இந்த எண்ணை வியாபராத்தில் ஓரு குறிப்பிட்ட குழுவொன்று லாபமீட்டி வருகின்றர். இதை நான் மாற்றி அமைப்பேன்.

ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு தொடர்பான விளக்கம்

Posted by - November 22, 2017

ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு தொடர்பான அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் விளக்கம் இத்துடன் காணொளி ஊடாக ஆங்கிலத்திலும், தமிழ் மொழியிலும் இணைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில்: தமிழ் மொழியில்:

முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணி

Posted by - November 22, 2017

மாவீரர் நாள் நிகழ்வுகளை உணர்வு பூர்வமாக அனுஸ்ரிக்கும்  நோக்கோடு முள்ளியவளை  மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நேற்று(21) மாலை நான்கு மணிமுதல் இரவு எட்டு மணிவரை இந்த சிரமதானப்பணி நடைபெற்றது குறித்த முள்ளியவளை மாவீரர் துயிலுமில்லத்தில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில் இந்த துயிலுமில்லத்தின் ஒரு சிறு பகுதி இராணுவ நிலைகள் அற்ற பகுதியாக காணப்படுகிறது இந்த பகுதியில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் இணைந்து துப்பரவு பணிகளை மேற்கொண்டதோடு முற்றுமுழுதாக இராணுவம் வெளியேறி எம்

புதிய எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி

Posted by - November 22, 2017

அவசர தேவைகளின் போது தேவையான எரிபொருளை கையிருப்பில் வைத்து கொள்வதற்காக எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவை இணை பேச்சாளரான அமைச்சர் தயாசிறி ஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளர். கொலன்னாவையில் களஞ்சியசாலை அமைப்பதற்கான அமைச்சரவை பத்திரத்திற்கே அங்கீகாரம் கிடைக்க பெற்றுள்ளது.