வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மலர்க் கண்காட்சி இடம்பெற்று வருகிறது.
தினமும் காலை 9 மணியிலிருந்து இரவு 8 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை ஏராளமானவர்கள் பார்வையிட்டு வருகின்றனர். 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் ஆர்வத்தோடு கண்காட்சியைப் பார்வையிட்டு மரக்கன்றுகளையும் பூச்செடிகளையும் வாங்கிச் செல்கின்றனர்.










