கிழக்கு உள்ளூராட்சிச் சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் முன்னாள் முதலமைச்சர் தெரிவிப்பு

315 0

புல்மோட்டை முதல் பொத்துவில் வரையுள்ள பெரும்பான்மையான உள்ளூராட்சிச் சபைகளை முஸ்லிம் காங்கிரஸ் தனித்து நின்று கைப்பற்றும் எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்னும் கட்சி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினூடாகவே வாக்குக் கேட்கின்றனர். அமீர் அலிக்கோ, மஹரூப்புக்கோ மக்கள் அளிக்கின்ற வாக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளிக்கும் வாக்காகும். இதனால் முஸ்லிம்களுக்குக் கிடைக்கின்ற நன்மை என்ன? ஆனால், அவர்கள் தமக்கான இலாபங்களையே ஈட்டிக்; கொள்வார்கள்.

அதேபோன்று தேசிய காங்கிரஸ் கட்சியினர் தமது வாக்குகளைப் பெற்று, மாயக்கல்லிமலையில் சிலை வைக்க முன்னின்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் வீரசேகர போன்றோருக்கே தாரைவார்க்கப் போகின்றனர். சுதந்திரக் கட்சியின் இராஜாங்க அமைச்சர் ஹஸ்புல்லாஹ்வுக்கோ அல்லது சுபைருக்கோ அளிக்கும் வாக்கு அக்கட்;சியையே பலப்படுத்தும். அதனால் நம் சமூகத்துக்குக் கிடைக்கப்போகும் பலன்; என்ன? ஆகவே உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கின் பிரதேசசபைகள், நகரசபைகள், மாநகரசபைகளை வென்றெடுக்க முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a comment