ஒக்கி’ சூறாவளி தொடர்பில் வானிலை அவதான நிலையம் சிறப்பு அறிக்கை!
இலங்கைக்கு அருகில் உருவாகி இருந்த ஒக்கி சூறாவளி, கொழும்பில் இருந்து மேற்கு திசையில் 600 கிலோமீற்றருக்கு அப்பால் சென்றிருப்பதாக வானிலை அவதான நிலையம் சிறப்பு வானிலை அறிக்கையொன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் , இன்றைய தினத்திலும் சில மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை எதிர்ப்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல் , தென் மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் சில நேரங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை சீரற்றக் காலநிலையால்

