அமெரிக்கா கோரிக்கை: ரஷ்யா மறுப்பு

316 0

ஏவுகணை சோதனையை மீண்டும் நடத்தியதால், வடகொரியாவுடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று கூறியதாவது: வடகொரியாவுடனான உறவை முறித்துக் கொள்வதை பாதகமாகவே நினைக்கிறோம். கடும் பொருளாதார தடைகளை விதித்து வடகொரியாவை கோபப்பட தூண்டிவிட்டதே அமெரிக்காதான். தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியாவை அழிக்க அமெரிக்கா நினைக்கிறதா? அமெரிக்காவின் நோக்கம் என்ன? வடகொரியாவை அழிக்க அமெரிக்கா காரணத்தைத் தேடுகிறதா? அப்படி என்றால் அதை அமெரிக்க அதிபர் உறுதி செய்யட்டும். இவ்வாறு செர்ஜி லாவ்ரோவ் கூறினார். – 

Leave a comment