ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக அதிபர் டிரம்ப் செய்தது தவறுதான் : பிரிட்டன் பிரதமர் தெரீசா மே

278 0

ட்விட்டரில் தீவிர வலதுசாரி காணொளிகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்தது தவறுதான் என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.ஆனால், இங்கிலாந்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே உள்ள “சிறப்பு உறவை” சுட்டிக்காட்டிய தெரீசா, இது தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

டிரம்பின் ட்வீட் குறித்து கேட்டதற்கு, “நாங்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்கிறோம் என்பதற்காக, அமெரிக்கா ஏதேனும் தவறாக புரிந்து கொள்ளும் போது நாங்கள் பேசாமல் இருக்க முடியாது” என்றார்.முன்னதாக, பிரிட்டனை சேர்ந்த ஒரு தீவிர வலதுசாரி அமைப்பினர் ஆத்திரமூட்டுகின்ற வகையில் இணையத்தில் பதிவேற்றியிருந்த மூன்று காணொளிகளை டொனால்ட் டிரம்ப் தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.”அவ்வாறு ட்விட்டரில் மறு பதிவு செய்தது முற்றிலும் தவறானது என்பதில் மிகத் தெளிவாக உள்ளதாக” தெரீசா குறிப்பிட்டார்.

“டொனால்ட் டிரம்ப் மாதிரியான ஒரு அதிபருடன், அமைதியான மற்றும் நிலையான உறவை வைத்துக் கொள்வது என்பது பிரிட்டன் பிரதமர் தெரீசாவிற்கோ அல்லது மற்ற யாருக்குமே ஒரு சவாலான விஷயம் தான்” என பிபிசியின் துணை அரசியல் ஆசிரியர் ஜான் பீனார் தனவு வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் குறித்த தெரீசாவின் விமர்சனத்தை ஒப்புக்கொண்ட ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி நிக்கொலா ஸ்டர்ஜன், அடுத்த ஆண்டின் அமெரிக்க பயணத்தை தெரீசா ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

Leave a comment