உடுவே தம்மாலோக தேரருக்கு எதிராக சாட்சி வழங்கிய சம்பவம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் தெளிவுபடுத்தல்

229 0

சட்டமா அதிபர் திணைக்களத்தினதோ அல்லது குற்ற விசாரணை திணைக்களத்தினதோ ஆலோசனைக்கமையவே அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரரை தொடர்புபடுத்தி சாட்சி வழங்கியிருந்ததாக ராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும் அவற்றில் எந்த நிறுவனம் என்பதை நிச்சயமாக கூற முடியாதுள்ளதாக அவர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

அனுமதிபத்திரமின்றி யானை குட்டி ஒன்றை தடுத்து வைத்திருந்தமை தொடர்பில் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றில் முன்னெடுக்கப்பட்டது.

வழக்கின் சாட்சியாளராக அப்போதைய வனவிலங்குத்துறை பிரதியமைச்சராக பதவி வகித்த வசந்த சேனாநாயக்க சாட்சி வழங்கினார்.

அனுமதிபத்திரமின்றி 3 யானை குட்டிகளை உடுவே தம்மாலோக்க தேரர் தடுத்து வைத்திருப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாகவும் குறித்த சுற்றி வளைப்பை தாமே திட்டமிட்டதாகவும் அவர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

Leave a comment