வவுனியா மாவட்டத்தில் யேர்மனி ஸ்ருட்காட் நகரில் உள்ள அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரின்நிதிப்பங்களிப்பில் உலருணவுப் பொதிகள்வழங்கப்பட்டன.

103 0

06/12/2025 இன்று  இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டைத்தைச் சேர்ந்த அண்ணா நகர்,பத்தினியார் மகிழங்குளம், ஓயார் சின்னக்குளம், கட்டையர் குளம் மற்றும் தரனிக்குளம், மறவன் குளம், ஈஸ்வரிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 127(நூற்றிருபத்தேழு) குடும்பங்களுக்கு ஜேர்மன் நாட்டிலுள்ள அருள்மிகு சிறீ சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினரின் நிதிப்பங்களிப்பில் “இயற்கைப் பேரிடர் நிவாரணம்” உலருணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. இப்பொதியில் அரசி, மா, பருப்பு, சோயா, சீனி, தேயிலை, பனடோல் ஆகியன அடங்குகின்றன.