இன்று (2025/12/04) வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி கிராமத்தில் இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியான 105 குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அரிசி, மா, சீனி, தேயிலை, பருப்பு, சோயா, சவர்க்காரம் என்பவற்றுடன் குழந்தைப்பிள்ளைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பால்மா என்ற அடிப்படிப்படையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. இக்குடும்பங்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்பவர்களாகவும் ஏனையோர் கூலித் தொழிலாளிகளாகவும் காணப்படுகின்றனர். அண்மையில் ஏற்பட்ட பேரிடரினால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த நிலையில் வயல் நிலங்களும் பெருமளவில் அழிவடைந்த நிலையில் கூலித்தொழிலாளர்கள் தொழில் வாய்ப்பை இழந்து வாழ்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
.




































