தாயகத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தினால் கடுமையான பாதிக்குள்ளான மக்களுக்கு, 04/12/2025 அன்று “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எம்முறவுகளுக்கு உதவுவோம்” எனும் தோனிப்போருளில், ஜேர்மன் நாட்டில் உள்ள Parkresidenz Grunewald,
Butterblume Finest Food Catering எனும் நிறுவனம் தாயக மக்களுக்கான இயற்கை பேரிடர் உலருணவு நிவாரணப் பொதிகளை புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம், சிவநகர், கைவேலி ஆகிய கிராமங்களில் உள்ள 103 குடும்பங்களுக்கு வழங்கியிருந்தனர். இவ் உதவித்திட்டத்தில் உலர்உணவுப் பொருட்களான அரிசி, மா, பருப்பு, சீனி, தேயிலை சோயா மற்றும் சிறுவர்களுக்கான பால்மா, சவர்க்காரம் ஆகியவை அடங்குகின்றன.
இந்த உதவியினைப் பெற்ற மக்கள் யேர்மனி வாழ் மக்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.


