இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட எம் உறவுகளிற்கு இன்று 09/12/2025 திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்கேணி,சின்னத்தோட்டம்,ஈச்சந்தீவு,பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முகாமில் தங்கியிருந்து வீட்டிற்கு மீளச்சென்ற 150 குடும்பங்களுக்கு யேர்மனி சுட்காட் சிறி சித்திவிநாயகர் கோவில் நிர்வாகத்தினால் தாயக உறவுகளுக்குஉலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது. அரிசி கோதுமைமா,சீனி, தேயிலை,பருப்பு, சோயா போன்ற உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.பயன்பெற்ற மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.































