Breaking News
Home / புலம்

புலம்

தமிழாலயங்களிற்கிடையிலான தமிழ்த்திறன் போட்டி 2017 யேர்மனி

தமிழாலயங்களில் விளைந்த தமிழ்…. உலகெங்கம்; வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே !! தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில் தமிழ் விளைந்து நிற்கின்றது. நாடு முழுவதிலுமுள்ள நூற்றுக்கும் மேலான தமிழாலயப் பள்ளிகளில் தமிழ் மொழி பயிலும் மாணவர்களின் மொழித்திறனைக் கணிக்கும் வகையில் ஆண்டு தோறும் தமிழ்த்திறன்போட்டி நடத்தப்பட்டு வருகின்றது. நிகழ்வில் முக்கிய விடயங்களாக மனனப் போட்டி, உரையாற்றல், கவிதை, உறுப்பமைய எழுதுதல், கட்டுரை, சொல்வதெழுதுதல், …

Read More »

யேர்மனியில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் நடைபெற்ற நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவான அடையாள கவனயீர்ப்பு நிகழ்வு

தாயகத்தில் நடைபெறும் மக்களின் நிலமீட்பு போராட்டத்திற்கு ஆதரவாக இன்றைய தினம் யேர்மனியில் பேர்லின் நகரில் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னால் அடையாள ஆதரவு கவனயீர்ப்பும் மனுகையளிப்பும் நடைபெற்றது.தமிழர் நிலத்தை அபகரித்து , தமிழர் வாழ்வுரிமையை மறுதலித்து ,தமிழீழ தேசத்தை அழிக்கும் வகையில் சிங்கள பேரினவாத அரசு முன்னெடுக்கும் கடடமைப்புசார் இனவழிப்பை எடுத்துரைக்கும் முகமாக நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பதாதைகளை தங்கியவண்ணம் மழை குளிரை பாராது நீதி வேண்டி அமைதி போராட்டத்தில் ஈடுபட்டனர். …

Read More »

சுவிசில் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நடைபெற்ற லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!

07.02.2005 அன்று வெலிகந்தைப் பகுதியில் சிறிலங்காத் துணைப்படையினரால் படுகொலை செய்யப்பட்ட மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட நான்கு மாவீரர்கள், மாமனிதர் சந்திரநேரு அரியநாயகம் ஆகியோரின் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 19.02.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சப்கவுசன்; மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு …

Read More »

2017 ஐ நா நோக்கிய எழுச்சிப்பயணத்திற்கான பாடல்

இசை ; …..இரா சேகர் பாடல் வரிகள்;…கவிஞர் தமிழ்மணி குரல் ;…..கிரிதரன் ,ஜித்தன் ,கார்த்திக் எம் உரிமைக்கான ஐ நா நோக்கிய எழுச்சிப்பயணத்திற்கு அணி திரண்டு வாருங்கள்

Read More »

கேப்பாபிலவு மக்களின் போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் யேர்மன் மொழியிலான தகவல்க்காணொளி

தாயகத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்தின் நியாயத்தை யேர்மன் மக்களுக்கும் வேற்றின சமூதாயத்துக்கும் எடுத்துரைக்கும் முகமாக யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மன் மொழியில் வெளியிடப்பட்ட தகவல்க்காணொளி.

Read More »

இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக நடைபெற்ற பேரணி

இத்தாலி பலெர்மோ நகரத்தில் கேப்பாபிலவு மக்களின் மண்மீட்ப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாக எமது நிலம் எமக்கு வேண்டும் பேரணி நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வின்போது “எங்கள் நிலங்கள் எமக்கு வேண்டும்” “இராணுவமே வெளியேறு” “எமக்கு தேவை சுதந்திரம்” “எங்கள் நாடு தமிழீழம்” என பல கோசங்கள் ஒலிக்கப்பட்டன.தாயக உறவுகளின் போராட்டங்களோடு அவர்களுக்கு ஆதரவுக்குரலாக எப்போதும் நாங்கள் இருப்போம் எனவும் அனைவரும் உறுதியெடுத்துக்கொண்டதோடு நிகழ்வு நிறைவடைந்தது.

Read More »

மெல்போர்ணில் ரணிலுக்கெதிராக போராட்டம்!

அவுஸ்ரேலியாவுக்கு அதிகார பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நேற்றைய தினம் மெல்போர்ணில் சிங்களவர்களும், தமிழர்களும் வெவ்வேறு நோக்கங்களுக்காக போராட்டம் நடாத்தினர்.ரணில் விக்கிரமசிங்கவுக்கு கலாநிதிப்பட்டம் வழங்கிய டீக்கின் பல்கலைக்கழகத்தில் நேற்று ரணில் விக்கிரமசிங்க உரையாற்றினார். இதற்காக அவர் நேற்று டீக்கின் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்தபோது வெவ்வேறு காரணங்களுக்காக சிங்களவர்களும் தமிழர்களும் ஆர்ப்பாட்டம் நடாத்தினர்.போர்க்குற்றவாளிகளைக் கௌரவிக்காதே போன்ற வாசகங்களை ஏந்தியதுடன், புலிக்கொடியையும் ஏந்தி தமிழர்கள் போராட்டம் நடாத்தினர். …

Read More »

கேப்பாபிலவு மக்களுக்கான ஆதரவு ஒன்றுகூடல் – சிட்னி

தமிழர் வாழும் பிரதேசங்களிலிருந்து சிறிலங்கா படையினரை வெளியேறுமாறு கோரி தமிழர் தாயகமெங்கும் நடைபெற்றுவரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒஸ்ரேலியாவின் சிட்னியில் தமிழர் ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை 17 – 02 – 2017 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வில் நூறு வரையான தமிழர்கள் பங்குகொண்டு தமது தாயக உறவுகளுக்கான ஆதரவை தெரிவித்தனர். குறுகிய கால அறிவிப்போடு பலரும் வருகைதந்து கடுமையான மழைக்கு மத்தியிலும் நனைந்துகொண்டு நிகழ்வில் …

Read More »
http://www.themesfreedownloader.com latest government jobs stock market tutorial