தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகம் நடாத்தும் தமிழின அழிப்பு நினைவுநாள் – மே 18 போட்டிகள்

213 0

தமிழீழத்தில் சிங்கள அரசினால் தமிழின அழிப்புத் தொடர்ந்தும் நடாத்தப்பட்டுவருகிறது. 2009 மே 18 முள்ளிவாய்க்கால்வரை சிங்கள அரசினால் நிகழ்த்தப்பட்ட தமிழின அழிப்பின் 15 ஆம் ஆண்டு நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் – அனைத்துலகத் தொடர்பகத்தினால் அனைத்துலக ரீதியில் வரைதல் (ஓவியம்), குறுகிய ஆவணக்காணொளி ஆக்கம், கட்டுரை எழுதுதல், கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகள் நடாத்தப்படுகின்றன. இப்போட்டிகளுக்கான விதிமுறைகள், விண்ணப்பப் படிவம் என்பன இணைக்கப்பெற்றுள்ளன. ஆர்வமுள்ள அனைவரும் இப்போட்டிகளில் பங்குபற்றி தமிழின அழிப்பு சார்ந்த ஆவணக் காப்பிற்கும் தேடலுக்கும் வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழர் கலைபண்பாட்டுக் கழகம்,
அனைத்துலகத் தொடர்பகம்.