நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவெழிச்சி நிகழ்வு.

46 0
நாட்டுப்பற்றாளர் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவெழிச்சி நாளும்
நாட்டுப்பற்றாளர் நாளும்
1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கை மூலம் அமைதி காக்கும் படையாக தமிழீழத்திற்கு வந்த இந்தியப்படைகள் தமிழர்கள் மீது அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் இளைத்தபோது அதற்கெதிராக, 19.03.1988ஆம் ஆண்டு 2அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாநோன்பிருந்து
19.04.1988 அன்று ஈகைச்சாவடைந்த அன்னை பூபதி அவர்களின்  தாயகவிடுதலையை உளமேற்று அத்தோடு  இரவு பகல் பாராது ஆழக்கடலில் படகோட்டிகளாகப் பயணித்தும் காடுமலைகளில் நெடும் தூரம் தோழ்களில் உணவுப்பொதி சுமந்து போராளிகளுக்கு உணவளித்தவர்களாகவும், இந்திய இராணுவ காலங்களில் விடுதலைப்புலிகளுக்கு
அடைக்கலம் கொடுத்து காத்தவர்களாகவும், பல வழிகளில் போரட்டத்தின் பின் புலமாக நின்று சாவைத் தழுவிய நாட்டுப்பற்றாளர்களதும் நினைவெழிச்சியானது சிறப்பான முறையில் முதன்மையான நிகழ்வுகளுடன்  பெல்சியம் அன்வேற்பனில் 22.04.2024 அன்று உணர்வு பூர்வமாக நினைவு கூறப்பட்டது. அத்தோடு மார்ச்சு மாத களத்தில்…இதழும் வெளியிட்டு வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் மக்கள் உணர்வெழுச்சியோடு கலந்து கொண்டு நினைவேந்தினார்கள்.