வலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் கொழும்பில் உயர்மட்டக் கலந்துரையாடல்

333 0

jaffna-meeting-270116-380-seithyவலி.வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பாக சில முடிவுகளை எடுப்பதற்கான உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவரின் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மீள்குடியேற்ற அமைச்சர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலர், இராணுவத்தினர் இக் கலந்துரையாடலில் பங்கு கொள்ளவுள்ளனர். இக் கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.
புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்ததப் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலி.வடக்கின் மீள்குடியேற்றத்தினை 6 மாதகாலப்பகுதிக்குள் முழுமைப்படுத்துவதாக உறுதியளித்துச் சென்றிருந்தனர்.
இருப்பினும் அவருடைய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி வலி.வடக்க வாசிகள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்திருந்தார்கள்.
இந்நிலையில் கட்டம் கட்டமாக வலி.வடக்கின் மீள்குடியேற்றம் நடைபெற்றிருந்தது. இதன்படி தற்போது 5 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய 800 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு இனங்காணப்பட்ட பகுதிகளை உறுதிப்படுத்தும் முகமாகவும், வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாங்களில் சொந்தக் காணிகள் இல்லாத நிலையில் தங்கியுள்ளவர்களுக்கு காணியும், வீடும் வழங்குவது தொடர்பான இறுதி முடிவுகள் இன்று நடைபெறும் கலந்துரையாடலில் எட்டப்படும் என்னும் எதிர்பார்க்கப்படுகின்றது.