பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

261 0

உடரட புகையிரத வீதியில் உடுவர மற்றும் ஹாலிஎல புகையிரத நிலையங்களுக்கு இடையில் கறுப்பு பாலத்தின் அருகாமையில் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கு அமைய குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தேகெதர – பதனவத்த பிரதேசத்தினை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சடலத்தின் அருகாமையில் இருந்து விஷ போத்தல் ஒன்று இருந்துள்ள நிலையில், இது தற்கொலையாக இருக்க கூடும் என காவற்துறை சந்தேகித்துள்ளது.

Leave a comment