இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன!

229 0
சுயநிர்ணய உரிமையே அவசியமான முக்கியமான தீர்வு என தெரிவித்துள்ள அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின்  உறுப்பினர் விலே நிக்கெல் இதற்கான சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அமெரிக்கா  அங்கீகரிக்க செய்வது மிகவும் அவசியமான நடவடிக்கை ஆனால் அதற்கான ஆதாரங்கள் உள்ளன  பராக் ஒபாமா தனது நூலில் இது குறித்து பேசியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் கார்டியனிற்கான பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

 

அமெரிக்க காங்கிரஸில் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை சமர்ப்பித்தமைக்கு நன்றி – அதுபற்றி மேலும் தெரிவிக்க முடியுமா உங்களை இதனை செய்ய தூண்டியது என்ன என குறிப்பிடமுடியுமா?

பதில்-

இலங்கை நிலவரம் தமிழ் மக்களிற்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்கள் குறித்து அமெரிக்காவில் எங்கள் குரல்கள் செவிமடுக்கபடுவதை நோக்கிய மிகவும் முக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கை இது என நான் கருதுகின்றேன்.

சுயநிர்ணய உரிமையே அவசியமான தீர்வு  அதனை அமைதியான வழியில் அடையலாம் என நான் கருதுகின்றேன்.

உலகின் ஏனைய முக்கியமான நாடுகள் இது குறித்து ஆராய்ந்துள்ளன அமெரிக்காவும் இது குறித்து ஆராயவேண்டும் .

இது மிகவும் அவசியமான முதல்கட்ட நடவடிக்கை காங்கிரசின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்தும் அதற்கு அப்பாலும் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளது,நாங்கள் எதனை நோக்கி செல்கின்றோம் என்பது குறித்து நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன்.

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் இது குறித்து கலந்துரையாடினேன் அவர்கள் நாங்கள் இந்த விடயத்தில் அவர்களின் தலைமைத்துவத்துடன் இணைந்துகொள்ளவுள்ளமை குறித்து மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள்.

 

காங்கிரசில் நீங்கள் சமர்ப்பித்துள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

பதில்- மக்கள் தங்களின் குரல்கள் செவிமடுப்பதை உறுதி செய்தால் மாத்திரமே வோசிங்டனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

நாங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தீவிரபரப்புரையை மேற்கொள்ளவேண்டியுள்ளது – காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸிற்கு விஜயம் மேற்கொண்டு உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டும் அதன் மூலமே அவர்களின் ஆதரவை பெறமுடியும்.

காங்கிரசின் இரு தரப்பு உறுப்பினர்களிற்கு நீங்கள் இந்த விடயத்தில் தெளிவுபடுத்தவேண்டும்,அதனை செய்தால் நாங்கள் அந்த விடயத்தில் வெற்றிபெறுவோம்,

உலகம் முழுவதும் செவிமடுக்கப்படக்கூடிய உண்மையான செய்தியை தெரிவிக்கவேண்டும்.

 

கேள்வி – இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரிப்பது ஏன் மிக முக்கியமான விடயம்?

பதில்- எதனை செய்வது என்றாலும் கடந்தகாலங்களில் விடயங்கள் நிகழ்ந்தன இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.

இதனை செய்யும் வரை நாங்கள் முன்னோக்கி நகர்வது மிகவும் கடினம்.

இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் தரவுகள் தெளிவாக உள்ளன.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது சுயசரிதையில் ஐநாவின் போதிய ஆதரவு கிடைக்காதது குறித்து தெரிவித்துள்ளார்.இலங்கையில் இடம்பெறும் வெளிப்படையான இனப்படுகொலை குறித்தே அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே இந்த செயற்பாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பது மிக முக்கியமான விடயம் அந்த விடயத்திற்கு தீர்வை காணும் வரை அடுத்த கட்ட சவாலான விடயங்கள் குறித்து நகர்வது கடினம்.

கேள்வி – சுயநிர்ணய உரிமை சர்வஜனவாக்கெடுப்பு குறித்து பேசுகின்ற போது நீங்கள் இந்த விடயத்தில் அமெரிக்கா பல உலக நாடுகளிற்கு உதவியமை குறித்து கருத்து தெரிவித்திருந்தீர்கள் – இலங்கையில் இது சாத்தியம் என நீங்கள் கருதுகின்றீர்களா?

பதில் – இது இலங்கையில் இடம்பெறவேண்டும் என நான் கருதுகின்றேன் அமெரிக்காவில் உள்ள எங்கள் விழுமியங்கள் மூலம் வழிகாட்டவேண்டும் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும்.

சுயநிர்ணய உரிமைக்கான உரிமை என்பது மிகவும் முக்கியமானது ஏன் அது முக்கியமானது என்பதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் அமெரிக்காவின் வரலாற்றை பார்க்கவேண்டும் .