முச்சக்கரவண்டிக்கான மீற்றர் பொருத்தும் வர்த்தமானி அறிவித்தல் விரைவில்

372 0

பொது பாவனையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கான மீற்றர்களை கட்டாயப்படுத்தும் வர்த்தகமானி அறிவித்தல் விரைவில் வௌியிடப்படவுள்ளன.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

வர்த்தமானி அறிவித்தலை தயாரிக்கும் பணிகள் துரிதமாக வெளியிடப்பட்டு வருவதாக அந்த சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார்.

அதேவேளை, இதுகுறித்த அறிக்கை போக்குவரத்து அமைச்சரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Leave a comment