தனிப்பாவனை பிளாஸ்டிக் நுகர்வு பற்றிய உள்நோக்கு !

96 0

ஒரு தடவை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஆகும். ஆனால் சில தனிப்பாவனை பிளாஸ்டிக் பொருட்கள் தூக்கி எறியப்படுவதற்கு முன்பு குறுகிய காலத்திற்கு மீண்டும் நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தனிப்பாவனை பிளாஸ்டிக் என்பது பல தசாப்தங்களாக அதிகளவில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிகின் ஒரு வகையாகும். சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தில் பிளாஸ்டிக் கழிவுகளின் விளைவுகள் பரந்தவையாக இருப்பதுடன் தீவிரமானவையாகவும் காணப்படலாம்.

தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்துடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்கள் அன்றாட வேலையை எளிதாகவும் வசதியாகவும் செய்வதற்காக எப்போதும் புதிய தொழில்நுட்பத்தைத் தேடுகிறார்கள். உணவு மற்றும் நீரின் புத்துணர்ச்சியை பேணுவதற்காக தனிப்பாவனை பிளாஸ்டிக் உறைகளும் கொள்கலன்களும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. உறையிடுதல் போன்ற நடைமுறை நோக்கங்களுக்காக அதன் மலிவு நெகழ்வுதிறன் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இவ் வகையான பிளாஸ்டிக் பொருட்கள் அதி விருப்பமான தெரிவொன்றாக காணப்படுகிறது.

தனிப்பாவனை பிளாஸ்டிக் மற்றும் மக்கும் தன்மை அற்ற பொலிமர்கள் போன்ற சில கண்டுபிடிப்புகள் மிகவும் சாதகமானவை என்று கருதப்படுகின்றன ஆனால் அவற்றின் விரைவான பயன்பாடு அல்லது உற்பத்தி காரணமாக இப்போது சூழல் அமைப்பின் உயிரியல் உயிரற்ற கூறுகளில் நேரடி மற்றும் மறைமுக எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

பிளாஸ்டிக் முள்ளுக்கரண்டிகளும் கத்திகளும் பிளாஸ்டிக் பலசரக்குப் பைகள் பிளாஸ்டிக் கோப்பைகளும் கோப்பை உறைகளும் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் பிளாஸ்டிக் பானக்குழாய்கள் ஆகியற்றை தனிப்பாவனை பிளாஸ்டிகிற்கு உதாரணமாக கூறலாம். காதுகளை சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும்; பிளாஸ்டிக் காம்புடனான கொட்டன் பட் (cotton bud) பிளாஸ்டிக் கட்லரி/தட்டுகள் மற்றும் பீங்கான்கள்; பிளாஸ்டிக் பானக்குழாய்களும் பிளாஸ்டிக் கலவைகளும் பிளாஸ்டிக் உணவுக் கொள்கலன்கள் பிளாஸ்டிக் கோப்பைகள் போத்தல்கள் மற்றும் பானங்களை நிரப்பப் பயன்படுத்தப்படும் பிற பானக் கொள்கலன்கள் பிளாஸ்டிக் பைகள்/ பெக்கெட்டுகள் மற்றும் பிற பிளாஸ்டிக் உறைகள் போன்ற பிளாஸ்டிக் தயாரிப்புகள் மற்றும் சுகாதார திரவிய கொள்கலன்கள் போன்ற பொருட்கள் தனிப்பாவனை பிளாஸ்டிகின் கீழ் மிகவும் கவனம் செலுத்தப்படும் பொருட்களாகும்.

புள்ளிவிவரங்களின் படி 2050 ஆம் ஆண்டுக்குள் கடலில் பொலித்தீன் நுழையும் அளவு மிக அதிகமாக இருக்கும். அந் நேரத்தில் கடலில் வாழும் மீன் இனங்களை விட பொலித்தீன் அளவு அதிகரித்துக் காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உருப்படம் 1 – பொதுவாக பயன்படுத்தப்படும் தனிப்பாவனை பிளாஸ்டிக் பொருட்கள்

( மூலம் – இணையம்)

 

தனிப்பாவனை பிளாஸ்டிக் தடை செய்வதற்கான உலகளாவிய இயக்கம்.

பல நாடுகள் வரலாறு முழுவதும் தனிப்பாவனை பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கோ அல்லது கட்டுப்படுவதற்கோ சட்டங்களை இயற்றியுள்ளன. அதன்படி

⦁ 2014 ஆம் ஆண்டில் கலிபோர்னியா தனிப்பாவனை பிளாஸ்டிக் பைகளை தடை செய்த முதல் மாநிலமாகவும், மேலும் 2018 ஆம் ஆண்டில் பிளாஸ்டிக் பானக்குழாய்களை ஓரளவு தடை செய்த முதல் மாநிலமாகவும் மாறியது.

⦁ 2002 ஆம் ஆண்டில் இலகுரக பிளாஸ்டிக் பைகளை முற்றிலும் தடை செய்த முதல் நாடாக பங்களாதேஷ் அரசாங்கம் மாறியது. நாட்டின் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான பகுதியை மூழ்கடித்த பிளாஸ்டிக் பை கழிவுகள் காரணமாக, நாடு கடுமையான வெள்ளத்தை சந்தித்த பின்னரே இது இவ்வாறு மாறியது.

⦁ 2015 ஆம் ஆண்டில் அழகுசாதன பொருட்கள் மற்றும் பிற தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களில் பிளாஸ்டிக் மைக்ரோ மணிகளை பயன்படுத்த அமெரிக்கா தடை விதித்தது. இங்கிலாந்து, கனடா, தாய்வான், நியூசிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் சலவைப் பொருட்களில் மைக்ரோ மணிகளை பயன்படுத்த தடை விதித்தன.

⦁ ஆஸ்திரேலியா நாட்டின் விக்டோரியா மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து மெக்ஸிகோ நகரமும் இதே போன்ற தடையை அமுல்படுத்தத் தொடங்கியது.

⦁ 2018 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் பிளாஸ்டிக் மற்றும் ஸ்டைரோபோம் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் பானக்குழாய் (straws)போன்ற பத்து தனிப்பாவனை பிளாஸ்டிக் தயாரிப்புகளை தடை செய்தது.

⦁ 1994 ஆம் ஆண்டில் ருவாண்டா அரசாங்கம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை அழித்து தனிப்பாவனை பிளாஸ்டிக் பைகள் மீது தடை விதித்தது.

⦁ 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிரிட்டனில் பிளாஸ்டிக் பானக்குழாய்இ பிளாஸ்டிக் காம்புடனான கொட்டன் பட் ( cotton bud ) மற்றும் பிளாஸ்டிக் பானக்குழாய் ஆகிய அனைத்தும் தடைசெய்யப்பட்டன.  2050 ஆம் ஆண்டாகும் போது வேல்ஸ் நாடு  பூஜ்ஜிய கழிவுகளை உற்பத்தி செய்ய விரும்புகிறது.

⦁ பல ஆபிரிக்க நாடுகள் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி மற்றும் நுகர்வு தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன.

⦁ தாய்லாந்து நாட்டின் தனிப்பாவனை பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்யும் முடிவின் விளைவாக பெரிய பல்பொருள் அங்காடிகள் இனி தனிப்பாவனை பிளாஸ்டிக் பைகளை வழங்க அனுமதிக்காது.

இலங்கையில் தனிப்பாவனை பிளாஸ்டிக்

இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 1.59 மில்லியன் டன் பிளாஸ்டிக் குப்பைகள் தவறாகக் கையாளப்படுகின்றன. இக் கழிவுகளில் பாதி ஆறுகள் கால்வாய்கள்  மற்றும் இறுதியில் கடலுக்குள் நுழைகிறது.

தேசிய சூழல் சட்டத்தின் 23ய எனும் பிரிவில் உள்ள தத்துவங்களிக் படி, 1980 ஆம் ஆண்டின் 47ஆம் இலக்க, இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதி விசேஷமான வர்த்தமானப் பத்திரிகைகள் கடந்த காலங்களில் சமீபித்திய எண்ணிக்கையில் பின்வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.

20 மைக்ரோன் அல்லது அதற்கும் கீழான தடிப்பம் கொண்ட பொலித்தீன் அல்லது எந்தவொரு பொலித்தீன் உற்பத்திப்பொருளை தடை

பொலித்தீனை மூலப்பொருளாகக் கொண்டு உணவு உறைகளை நாட்டினுள் பயன்படுத்துவதற்காக உற்பத்தி செய்தலையும், விற்பனை செய்தலையும், இலவசமாக வழங்குதலையும் பயன்படுத்துதலையும் தடை செய்கிறது.

பயன்பாட்டுக்கென உயர் அடர்த்தி கொண்ட பொலிஎத்திலினை பைகளை உற்பத்தி செய்தல்இ விற்பனை செய்தல்இ விற்பனைக்காக முன்வைத்தல், இலவசமாக வழங்குதல், காட்சிப்படுத்துதல் அல்லது; பயன்படுத்துதல்  தடை செய்கிறது.

பிளாஸ்டிக் அல்லது பிளாஸ்டிக் உட்பட்ட குப்பை கூளங்கள் மற்றும் பிற எரியக்கூடிய பொருட்களை திறந்த வெளியில் எரிப்பதை தடை

அலங்காரிப்பதற்காக எல்லா வடிவங்களிலுமான பொலிஎத்திலின், பொலிபிரோப்பலின் பொருட்கள் தடை

விரிவடையக்கூடிய பொலியெஸ்டரினிலிருந்து உணவு கொள்கலன்கள், தட்டுக்கள், கோப்பைகள் மற்றும் கரண்டிகளை தடை.

பொருட்களை பொதியிடுவதற்காக பொலிஎத்திலீன் டெரெப்தாலேட் (PET) அல்லது பொலிவைனைல் குளோரைட்டு (PVT) பொருட்களைப் பயன்படுத்து தடை

பிளாஸ்டிக் பானக்குழாய்களும் கலவைகளும், ஒரு தடவை மட்டும் பயன்படுத்தப்படும் உணவு கொள்கலன்கள், பீங்கான்கள், கோப்பைகள், கரண்டிகளை;, முள்ளுக்கரண்டிகள் மற்றும் கத்திகள் (விமான பயணங்களைத் தவிர), மாலைகள்,  இடியப்பத்தட்டுகள் பயன்படுத்த தடை

மாற்றுப்பயன்பாடு மீள் சுழற்சி செய்ய வேண்டும். தூய்மையான பசுமையான மற்றும் ஆரோக்கியமான சூழலில் வாழ்வதற்கும் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருத்தமான கழிவு மேலாண்மை நுட்பங்களை பயன்படுத்தி பிளாஸ்டிக் குப்பைகளிலிருந்து விடுபட்ட எதிர்கால தலைமுறையை வளர்ப்பது அவசியம் ஆகும்.

வேணுர பெர்னாண்டோ

தலைவர்

மத்திய சுற்றாடல் அதிகாரசபை