கொழும்பில் டெங்கு கட்டுப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பம்

14615 0
கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தொற்று நிலைமையை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (24) ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முப்படையினரும், பொலிஸாரும் உள்ளடங்களாக 1000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் குறித்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மாவட்டத்தில் 15 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள 557 கிராம அலுவலர் பிரிவுகளில் 2600 தொகுதிகளில் குறித்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தேசிய டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்கு அமைவாக இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

குறித்த வேலைத்திட்டங்களுக்கு அமைய ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தினங்களிலும் அரச மற்றும் தனியார் காரியாலயங்களின் சுற்றாடல்களை சுத்திகரித்தல் மற்றும் சனிக்கிழமை தினங்களில் வீடுகள் தோறும் சுத்திகரிக்கும் பணிகளை மேற்கொள்ளவதற்கு பொதுமக்களை வலியுறுத்தும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

Leave a comment