மஹராஸ்டிர நீர்வழங்கல் அமைச்சர் மற்றும் கிழக்கு விவசாய அமைச்சர் சந்திப்பு

271 0

இந்தியா மஹராஸ்டிரா மாநில நீர்வழங்கல் அமைச்சர் பாபன்ராவ் லொனிகர் மற்றும் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (24) மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண குடிநீர் விநியோகம் தொடர்பிலான தேவைகள் பற்றி ஆராய்வதற்காக அவர் விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, பிரதேசத்தின் நீர்வழங்கல்இ கால்நடை வளர்ப்புஇ நீர்ப்பாசனம் தொடர்பான தேவைகள் மற்றும் பல விடயங்கள் தொடர்பில் இருவருக்கும் இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

இந்த சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் குறிப்பிடுகையில்,

இந்தியா மஹராஸ்டிரா மாநில நீர்வழங்கல் அமைச்சர் பாபன்ராவ் லொனிகர் அவர்களை சந்தித்து எமது பிரதேசத்தின் பல்வேறு தேவைப்பாடுகள் குறித்து கலந்துரையாடினோம்.

மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலாக இது இடம்பெற்றது. இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வதற்கான முன்மொழிவுகள் அவரால் கோரப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் குறிப்பட்ட துறைகள் சார்ந்த தேவைப்பாடுகள் தொடர்பான முன்மொழிவுகளை தயாரித்து அவற்றை நிவர்த்தி செய்வதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாகாணத்தில் நிலவும் விவசாய நீர்பாசன பிரச்சினைகள், குடிநீர் பிரச்சினைகள் மற்றும் நீர் முகாமைத்துவம் தொடர்பாகவும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாக அமைச்சர் கே.துரைராசசிங்கம் குறிப்பிட்டார்.

Leave a comment