கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்(காணொளி)

419 0

 

மாவட்ட செயலகத்தில் 30 நிமிடங்கள் இடம்பெற்ற கூட்டத்தை தொடர்ந்து கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை பார்வையிடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், படை அதிகாரிகள், அரசாங்க அதிபர், மக்கள் 5 பேர் உள்ளிட்டவர்கள் சென்றிருந்தனர்.

கேப்பாபுலவு இராணுவ முகாமின் நுழைவாயிலில் மக்களின் கையடக்க தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நிழற்படங்களையோ, காணொளிகளையோ எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

பாதுகாப்பு உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாடாளுடன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இதனையடுத்து மக்கள் தரப்பில் 5 பிரதிநிதிகளையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராச, எம்.ஏ.சுமந்திரன், கே.மஸ்தான் ஆகியோர் காணிகளை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.