கேபப்பாபுலவில் இராணுவத்தினர் வசமுள்ள காணியை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட கேப்பாபுலவு மக்கள் பகுதியளவான காணி விடுப்பு வரவேற்கத்தக்க விடயம் என்கின்ற போதிலும் அனைவரின் காணிகளும் விடுவிக்கப்படும் வரை தமது போராட்டம் தொடரும் என வலியுறுத்தினர்.
மக்களின் கோரிக்கையை செவிமடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் எஞ்சிய காணிகளை விடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக குறிப்பிட்டார்.

