பெண்கள் தொடர்பில் வீரம்செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில் பெண்கள் உரிமைகள் நிலைப்பாடவில்லை

270 0
பெண்கள் தொடர்பில் வித்தியாசமான வீரம் செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில்  யுத்தகளத்தில் தலைமை தாங்கிய பெண்களை கொண்ட சமூகத்தில்  இன்னும் பெண்கள் தொடர்பில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலைக்குரியது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூகநீதிகான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிருத்தி மன்றத்தில் இடம்பெற்ற பெண்கள் தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது
பெண்கள் தங்களது உரிமகளை வென்றெடுக்க வேண்டும் என்றால் முதலில் பெண்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்கான நிலையை உறுதிப்படுத்த வேண்டும்.  இலங்கை தீவில் பெண்களின் அரசியல் விகிதம் வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் வெறும் பத்து பதினைந்து பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் இலங்கை பாராளுமன்றில் உள்ளனர்  இப்படி இருக்கும் போது  எப்படி நாடு பெண்களுக்கான முன்னுரிமை வழங்கும் என்பதை நாங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
பெண்களுக்கு எதிராக அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள் சட்டங்கள் என்பனவற்றுக்கு எதிராக நியாயத்த வழங்க  அவர்களுக்குரிய பிரதிநிதித்துவத்தை வழங்காமல் எப்படி சாத்தியப்படும் என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். இது வெளும் பாராளுமன்றத்தில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு பிரதேசங்களில் உள்ள மாகாண சபைகளிலும் நிலைமை இவ்வாறுதான் உள்ளது. வடக்கு மாகாணசபையில் 38 உறுப்பினர்களில் ஒரு பெண்தான் உறுப்பினராக உள்ளார் உள்ளுராட்சி சபைகளிலும் இதே நிலைமைதான் காணப்படுகிறது.
இலங்கையின் அண்டைய நாடுகளில்  அரசியலில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள  முக்கியத்துவம் இலங்கையில் இல்லை  முஸ்லிம் நாடான பங்காளாதேசில் 46 சதவீத பிரதிநிதித்துவத்தை வழங்கியிருக்கிறது. பாகிஸ்தானும் இலங்கையை விட முன்னுரிமை வகிக்கிறது. மிக மோசமான பெண் ஒடுக்குமுறைகள் மிகுந்து காணப்பட்ட ஆப்கானிஸ்மதனில் தற்போது  பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து காணப்படுகிறது. ஏன் இலங்கையில் அது முடியவில்லை?
உள்ளுராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தில் பெண்களுக்கு40 வீதம் வழங்க  வேண்டும் என்று வலியுறுத்தப்பட்ட போதும் நாட்டின் பெரிய கட்சிகள் அதிக அங்கத்துவத்தை பெறுகின்ற  கட்சிகள் எல்லாம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் குறைந்தது 25 வீதமாவது இருக்க வேண்டும் என்று பாராளுமன்ற பெண் பிரதிநிதிகள் வலியுறுத்திய போது அது பல குழு விவாதங்களில் வந்த போது நான் கூட அந்த நேரத்தில் அதனை வலியுறுத்தி முதலில் 25 வீதம் வழங்கவேண்டும் என்று கூறியிருந்தேன். ஆனால் பழமைவாதிகள் பலர் அதனை மறுத்துவிட்டனர்.
இலங்கை பாராளுமன்றத்தில் உள்ள பெண் பிரதிநிதிகள் தானாக அரசியல் நின்று வந்தவர்கள் மிகமிகச் குறைவு  யாராவது இறந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மனைவியாக அல்லது மகளாக இருப்பார். பெண் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக வர முடியாது. அதற்க எங்கள் சமூகமும் பழக்கப்படவில்லை.. ஆனால் இவ்வாறு பெண்கள் தொடர்பிலான நிகழ்வுகளில் பெண்கள் உரிமைகள் பற்றி வாய்கிழிய பேசுவோம் அத்தோடு முடித்துக்கொண்டு சென்று விடுவோம் மீண்டும் மறுபடியும் அடுத்த  வருட நிகழ்வில் ஒன்று கூடி பேசுவோம் இது இங்குள்ள நிலைமைகள்.
வடக்கு பொறுத்தவரை கல்வியில் அதிகளவான மாணவிகளே சிறந்த பெறுபேறுகளை பெறுகின்றனர். வடக்கில் அதிகளவான பெண் அரச உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றனர். பலர் திணைக்களங்களின் தலைவர்களாக அமைச்சின் செயலாளர்களாக உள்ளனர் இருந்தும் என்ன பயன்? பெண்களின் அடிப்படை உரிமைகள் நிலைப்பாடவில்லை. எனவே பெண்களுக்கான உரிமைகள் நிலைநாட்ட   பாகுபடற்ற பால் நிலை சமத்துவத்தை  ஏற்படுத்த வேண்டும் என்றால் அதை நிலைநாட்ட எழுச்சியோடு முன்வரவேண்டும்
எங்களின் சமூக கட்டமைப்பு இன்றும் பெண்களுக்கு ஏதிராகவே இருக்கிறது. பெண்கள் தொடர்பில் வித்தியாசமான வீரம் செறிந்த வரலாறு எழுதப்பட்ட மண்ணில்  யுத்தகளத்தில் தலைமை தாங்கிய பெண்களை கொண்ட சமூகத்தில்  இன்னும் பெண்கள் தொடர்பில் மாற்றம் ஏற்படவில்லை என்பது கவலைக்குரியது.எனவே பெண்கள் இயல்பாக தங்களுக்குரிய உரிமைகளையும் சமத்துவத்தையும் பெற்றுக்கொள்ள போராட துணிய வேண்டும் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். அப்போதுதான்  பெண்களின் உரிமைகளை நிலைநாட்டும்  சூழல் உருவாகும்.  பெண்கள் அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு குரல் கொடுக்கும்  கட்டத்திற்கு தயார்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கிளிநொச்சி கல்விப் பண்பாட்டு அபிவிலுத்தி மன்ற்த்தின் கணிணி ஆசிரியை திருமதி தர்மினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கருணைப்பால செயலாளர் தியாகராசா, பொருளாளர் சுஜீவன், கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தின்  ஆரம்பி பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.