கிளர்ச்சியாளர்களிடம் இருந்து 70 ஆயிரம் பொதுமக்கள் மீட்பு

215 0

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து சிரிய நகரங்களை மீட்க ராணுவம் முற்றுகையிட்டுள்ளதையடுத்து 70 ஆயிரம் பேர் வரையில் வெளியேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் ஜனாதிபதிக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு யுத்தங்கள் இடம்பெற்று வருகிறது.

ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே இடம்பெறும் இந்த யுத்தத்தில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதில் 5 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு இடம்பெயந்;துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளர்ச்சியாளர்களிடம் இருந்து அலெப்போ உள்ளிட்ட பல நகரங்களை ராணுவம் மீட்டதையடுத்து, அதன் அருகேயுள்ள மேற்கு அலெப்போ உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற முற்றுகையிட்டுள்ளது.

தற்போது அங்கு யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து, குறித்த பகுதிகளில் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், அங்கு தங்கியிருந்த சுமார் 70 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.