சிலியில் பாரிய நில அதிர்வு

240 0

தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் இன்று பாரிய நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளது.

சிலி நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கலாமா நகரின் தென்கிழக்கே சுமார் 144 கிலோமீட்டர் தூரத்தில் இன்று முற்பகல் இந்த நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.

ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக இந்த நிலஅதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சேத விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், சுனாமி எச்சரிக்கைகளும் விடுக்கப்படவில்லை என அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.