வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாந்தியம்

245 0

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் மேலும் வலுவடையக்கூடிய சாந்திய கூறுகள் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இலங்கைக்கு நேரடி தாக்கங்கள் எதுவும் ஏற்படாத நிலையில், கடலோரப்பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 60 தொடக்கம் 70 கிலோமீட்டர் வரையில் வீசக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடற்தொழிலில் ஈடப்படுபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் காலநிலை அவதான நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.