மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையொட்டி…….(காணொளி)

287 0

 

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவினையொட்டி 10 கோடி ரூபா செலவில் பாடசாலையில் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, பாடசாலையின் அதிபரும், பழைய மாணவர் சங்க தலைவருமான கலீல் இர்ஷாட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் சந்திப்பும், பழைய மாணவர்கள் சந்திப்பும் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இச்சந்திப்பில் பழைய மாணவ சங்க ஆலோசகரும், பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர்அலி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.