ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே பொருளாதாரத்தை முன்னேற்ற முடியும்-பந்துல

8 0

மக்களை   ஏமாற்றும்   வகையில்  மாத்திரம்  அத்தியாவசிய  பொருட்களின்  விலைகளின்   மாற்றங்களை  ஏற்படுத்தினால் மாத்திரம்  பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப  முடியாது.    முறையான   அரசாங்கம்  ஒன்று   உருவாக்கப்பட   வேண்டும்    அதனூடாகவே   பொருளாதாரம்   எழுச்சிப்  பெறும்  என   பந்துல  குணவர்தன  தெரிவித்தார்.

சர்வதேச    நாணய   நிதியத்துடன்     2016ஆம்  ஆண்டு  அரசாங்கம்  செய்துக் கொண்ட அரச  கடன்  முறை  தொடர்பிலான   ஒப்பந்தத்தின்  பிரகாரம்   இவ்வருடத்தின்  முதற்காலாண்டிற்குள்   கடைசி   கடன்  தொகையினை  வழங்கப்படவில்லை  என்றால்  வரவு – செலவு   திட்டத்தை   செயற்படுத்துவது  பாரிய  நெருக்கடிகளை  ஏற்படுத்தும்  .

இவ்விடயம்  தொடர்பில்  மேலும்   குறிப்பிடப்படுவதாவது.

    1.5   பில்லியன்   அமெரிக்க டொலரை   ஆறு   தவணை  முறையில் பெற்றுக்   கொள்ள சர்தேவ  நாணய  நிதியத்துடன்    இலங்கை   அரச  கடன்  ஒப்பந்தத்தை  செய்துக் கொண்டுள்ள   நிலையில் . இவ்வொப்பந்தம்  எதிர்வரும்   ஏப்ரல்  மாதத்துடன்  முடிவடையவுள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல  குணவர்தன  தெரிவித்துள்ளார்.

இந்த  இறுதி  தவனை   அரச  கடனை   பெற்று   கொள்வது  தொடர்பில் சர்வதேச நாணய  நிதியம் இதுரை  காலமும்  எவ்விதமான கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லை.   இந்த  கடன்முறை   கிடைக்கப் பெறவில்லையாயின்  அரசாங் கத் தின் பல்வேறு  செயற்திட்டங்கள்  பாதிப்படையகூடும்.    மறுபுறம்   மக்களுக்கு  தேசிய  உற்பத்திகளை  வளப்படுத்த  வழங்குவதாக  குறிப்பிடப்படும்  இலவச  உர  விநியோகம்,  மற்றும்   அரச அதிகாரிகளின்  வேதன அதிகரிப்பு தொடர்பில்    குறிப்பிடுகின்றது.  இவையனைத்தும்  மக்களை  ஏமாற்றும்  ஒரு   பொய்யான  கருத்துக்களாகும்.

இறுதி   தவனைகடன்  169   மில்லியன்  அமெரிக்க  டொலர்  பெற்றுக்  கொள்ள  அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள் ளது.    கடந்த  காலத்தில்    நாட்டில்   ஏற்பட்ட    உள்ளளூர்  மட்டத்திலான     அரசியல்  நெருக்கடியினை    ஐக்கிய  தேசிய  கட்சி   சர்தேச   மட்டம்  வரை  கொண்டு   சென்று      நாட்டின்  பொருளாதாரத்திற்கு  பாரிய   நெருக்கடியினை  ஏற்படுத்தி யது.   ஐக்கிய  தேசிய   கட்சியின் முறையற்ற  பொருளாதார  முகாமைத்துவத்தின்   காரணமாகவே   அனைத்து   துறை களும்  பொருளாதார ரீதியில்  பின்னடைவினை   எதிர்கொண்டுள்ளது.

மக்களை   ஏமாற்றும்   வகையில்  மாத்திரம்  அத்தியாவசிய  பொருட்களின்  விலைகளின்   மாற்றங்களை  ஏற்படுத்தினால் மாத்திரம்  பொருளாதாரத்தை  கட்டியெழுப்ப  முடியாது.    முறையான   அரசாங்கம்  ஒன்று   உருவாக்கப்பட   வேண்டும்    அதனூடாகவே   பொருளாதாரம்   எழுச்சிப்  பெறும்  என்றார்.  

Related Post

ஜனாதிபதியின் உத்தரவை மீறி அனுராதபுரத்துக்கு மாற்றப்படும் வழக்குகள்!

Posted by - October 4, 2017 0
ஜனாதிபதியின் உத்தரவை மீறி அரசியல் கைதிகள் தொடர்பாக, வவுனியா நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்ற வழக்குகள் அநுராதபுரத்துக்கு மாற்றப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் !

Posted by - July 12, 2018 0
முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் விடயம் ஜெனீவா மாநாட்டில்

Posted by - September 15, 2016 0
காணாமல் போனோரின் விடயம் இன்றையதினம் ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் மாநாட்டில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின்,…

பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது. முதலாம் ஆண்டு மாணவர்கள் 8 பேர் மருத்துவமனையில்

Posted by - February 20, 2017 0
பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பகிடிவதை புரிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். குறித்த முதலாம் ஆண்டு மாணவர்கள் மெகொட களுகமுவ…

ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் மீளப் பெற்றுக் கொள்வதற்கு போதுமான முன்னெடுப்புகள்

Posted by - March 16, 2017 0
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையைப் மீளப் பெற்றுக் கொள்வதற்கு போதுமான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் தலைமைத் தூதுவர் டோங் லாய் மார்க் இதனைத்…

Leave a comment

Your email address will not be published.